7 வயதுச் சிறுமிக்கு 70 வயது கிழத்தால் நேர்ந்த கொடூரம்!

7 வயதுச் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 70 வயதுக் கிழவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதுக் கிழவன் பரீக் பிரதான். இந்த நபருக்கு தனது வீட்டுக்கு அருகில் வசித்த 7 வயதுச் சிறுமி மீது ஒரு கண் இருந்தது. அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த அந்த நபர், சிறுமிக்கு சில நாட்கல் தினமும் சாக்லேட் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் அந்தச் சிறுமி அந்த நபருடன் கள்ளம் கபடமின்றிப் பழகிவிட்ட நிலையில் ஒருநாள் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கிழவன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்ததை அந்தச் சிறுமி கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தாள்.

இதையடுத்து அந்தச்சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கிழவன் பரீக் பிரதானை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் தனது கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு திருமணத்த்துக்குச் சென்ற 16 வயதுச் சிறுமியை 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

கபீர்தாம் மாவட்டம் குக்தார் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட அந்த கிராமத்தில் திருமண வீட்டில் இருந்து ஒரு கடைக்குச்  சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து அருகில் இருந்த வனப் பகுதிக்கு கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மேலும் 4 பேர் இருந்தனர்.

அந்தச்  சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரும் அந்தச் சிறுமியை அங்கெயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இதையடுத்து அங்கிருந்து எவ்வாறோ வழியைக் கண்டுபிடித்து கிராமத்துக்கு வந்து சேர்ந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை உறவினர்களிடம் தெரிவித்தார். 

இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கடத்தல், பாலியல்பலாத்கார்ம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை கைது செய்ய சிறுவர்கள் உள்ளிட்ட பலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.