கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி வரும் சிறுமியின் உடல்..! மருத்துவர்களையே அதிர வைத்த விநோத காரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 வயது சிறுமியின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி வரும் சம்பவம் அங்கு இருப்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரி என்ற 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு மிகவும் அதிர்ச்சிகரமான வியாதி ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

அதாவது சிறுமியின் உடலில் உள்ள தோல் மட்டும் கல்லாக மாறும் வியாதி தான் அது. சிறிது சிறிதாக சிறுமியின் உடல் பகுதியில் உள்ள தோல் கல்லாக மாறி வருகிறது. இதனால் அந்த சிறுமியால் நடக்கவும் முடியாமல் எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்.

இந்த வியாதியானது சிறுமிக்கு ஒரு வயது முதலே இருந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அவர்கள் இருப்பது கிராமப்பகுதி என்பதால் சிறுமிக்கு தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை . ஆகையால் அந்த சிறுமி மகேஸ்வரியை அவரது பெற்றோர் நகர்புறத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் சிறுமியின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அவர்கள் மிகவும் சோகத்தில் கூறியுள்ளனர். முதலில் உடலில் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்ட இந்த வியாதி தற்போது உடலின் பெரும் பகுதியில் பரவி இந்த சிறுமியை அவதிக்குள்ளாக்கி வருகிறது. தற்போது அந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.