82கிமீ! இடைவிடாத சைக்கிள் பயணம்! 2ம் வகுப்பு மாணவனின் அசத்தல் சாதனை!

82 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் சைக்கிள் மூலம் கடந்து 7 வயதுச் சிறுவன் சாதனை படைத்துள்ளான்.


கோவையை சேர்ந்த கோபால்சாமி என்பவரது மகன் அபினவ். 2-ஆம் வகுப்பு படித்து வரும் இந்த ச் சிறுவன் புதுச்சேரியின் காலாப்பட்டு என்ற இடத்தில் இருந்து மாமல்லபுரம் வரையான  82 கிலோமீட்டர் துரத்தை நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டிக் கடந்தான்.

இடையில் எங்கும் சைக்கிளை நிறுத்தாமல் 82 கிலோமீட்டர் தூரத்தையும் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்தான் சிறுவன் அபினவ் அதிகாலை 4.30 மணிக்கு சைக்கிள் பயணம் தொடங்கிய நிலையில் இடையில் எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்து காலை 8.20 மணிக்கு அபினவ் மாமல்லபுரத்தை அடைந்தான்.

இதற்காக தான் தொடர் பயிற்சி மேற்கொண்டதாகவும், தனது பெற்றோரும் தன்னை ஊக்குவித்ததாகவும் அபினவ் தெரிவித்தான். அபினவுக்கு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனங்கள் சான்றிதழ்களை வழங்கியுள்ளன.