7 வயது சிறுமியை சுயஇன்பம் செய்ய வைத்த கொடூரம்! தாய் மாமனால் அரங்கேற்றப்பட்ட பயங்கரம்! கடலூர் அதிர்ச்சி!

பெற்ற மகள்கள் இருவரை தாயிடம் விட்டுவிட்டு ஒரு பெண் வேறு நபருடன் குடும்பம் நடத்திய நிலையில் அந்தச் சிறுமிகள் இருவரையும் 10 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 5 மாதங்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.


திண்டிவனத்தைச் சேர்ந்த பெண் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டதால் அங்கு சென்று அவருடன் குடும்பம் நடத்தினார். இதனால் 9 மற்றும் 7 வயதான தனது குழந்தைகளை திண்டிவனத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டுச் சென்றார். 

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் தனது மகள்களை காண வந்தபோது 2 சிறுமிகளும் தங்களை 10 பேர் கும்பல் 5 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகக் கூறி கதறி அழுததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து இரண்டு சிறுமிகளையும் புதுச்சேரிக்கே அழைத்துச் சென்ற அந்தப் அரசுப் பள்ளி ஒன்றில் சேர்த்தார். இதனிடையே வீட்டில் இருந்த போது சிறுமியின் செயலில் மாற்ற ம் தெரிந்துள்ளது. சிறுமி எப்போதும் தன்னுடைய அந்த உறுப்பில் கைகளை வைத்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் திண்டிவனத்தில் பாட்டி வீட்டில் இருந்த போது தாய் மாமனால் ஏற்பட்ட விபரீதம் தெரியவந்தது. சிறுமிகளுக்கு பாலியல் விஷயங்களை சொல்லிக் கொடுத்து அவன் நாசம் செய்துள்ளான்.

இந்த நிலையில் ஒரு சிறுமி பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் அந்தச் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் முழுவதும் இருந்த காயங்களைக் கண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். மற்றொரு சிறுமிக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாலியல் பலாத்காரம் உறுதிப்படுத்தபட்டது.

இதனையடுத்து சிறுமியின் தாயாரை அழைத்து பள்ளி நிர்வாகம் கேட்டபோது, அவர் திண்டிவனத்தில் நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகளை நலவாரியத்துக்கு ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 8 பேரை கைது செய்துள்ள போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.