பாலியல் வல்லுறவு! நொறுக்கப்பட்ட எலும்புகள் ! 30 வயது கொடூரனால் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்!

குடிபோதையில் 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததோடு எலும்பை நொறுக்கி கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னூஜ் நகரை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி கிராமத்தைச் சேர்ந்தவர்களோடு அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரமாக அந்தச் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோரும் குடும்பத்தினரும் தேடத் தொடங்கினர். ஆனால் சிறுமி கிடைக்காத நிலையில், சிறுமி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கிராமத்தைச் சேர்ந்த 30 வயது நபர் அந்தச் சிறுமியை தூக்கிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அந்த நபர் பின்னர் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான உண்மைகளை ஒப்புக்கொண்டான்.

சிறுமியை கடத்திச் சென்ற போது தான் மது  அருந்தியிருந்ததாகவும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கொன்று அருகில் உள்ள ஆற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தான். அதன் பேரில் அந்த சிறுமியின் உடலை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். உடற்கூறு சோதனையில் அந்த சிறுமியின் 12 எலும்புகள் நொறுங்கியிருந்தது தெரிய வந்தது. அந்த கொடூரனை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.