கொடுங்கையூரில் 7 வயது சிறுமி பிறந்தநாள் கொண்டாட துணிமணி வாங்கிக்கொண்டு திரும்பும் போது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
தந்தையின் அலட்சியம்! ஒன்வேயில் பைக் பயணம்! பரிதாபமாக பலியான சிறுமி!
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சாண்டில்யன் , மனைவி வடிவுக்கரசி இருவருக்கும் திருமணமாகி 7 வயதில் அக்ஷ்யா என்ற மகள் உள்ளார்.
அஷ்யா தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இன்று காலை மூலக்கடை பகுதியில் கடைக்கு சென்ற சாண்டில்யன் மகளின் பிறந்த நாளுக்கு ஆசையாக துணிமணிகள் வாங்கிக் கொடுத்து மோட்டார் பைக்கில், அக்ஷ்யாவுடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மூலக்கடை சந்திப்பின் எதிரில் வேகமாக வந்த மோட்டார் பைக் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அக்ஷ்யா தலையில் பலமான காயமடைந்ததில், இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுமி அஷ்யா பாதி வழியில் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.பிறந்தநாள் கொண்டாட்டதில் இருந்த அஷ்யா தந்தை கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் சாண்டில்யன் வந்ததே விபத்து ஏற்பட்டு அவரது மகள் மரணிக்க காரணமாகிவிட்டது.