ஆடைகளை களையப்பட்டு சடலமாக கிடந்த 7வயது சிறுமி! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

7 வயது சிறுமியின் சடலம் நிர்வாண நிலையில், வயல்வெளியில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் இருந்துதான் நிர்வாண நிலையில் இப்படி 7 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கழுத்தைச் சுற்றி சல்வார் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பார்த்தால், சிறுமியை யாரேனும் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் குறிப்பிடுகின்றனர். இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமி பிரசாத் வழக்குப் பதிந்து, விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் சிலரின் மீது சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார். இதன்பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து சிறுமிகளை குறித்து வைத்து கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யும்போக்கும் மத்தியபிரதேசம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த குற்றங்கள் குறையும்.