கொடூர நோயால் கண்கள் பிதுங்கி வெளியேறிய பயங்கரம்..! ஆனால் மீண்டும் பார்வைத் திறன் பெற்ற சிறுவன்! கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு!

டெல்லி: கண்களில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்குப் போராடிய 7 வயது சிறுவனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் டோர்ஜி என்ற 7 வயது சிறுவனுக்கு, கடந்த 2016ம் ஆண்டில் கண்களில் கடுமையான வீக்கம் ஏற்பட்டது. பிறகு, அந்த வீக்கங்களில் இருந்து அவ்வப்போது, ரத்தம் கசிய தொடங்கியது. இதனால், சிறுவனுக்கு இரு கண்களிலும் பார்வை பறிபோனது. அவனது பெற்றோர் வேதனை அடைந்தனர்.

தங்களது மகனை காப்பாற்றுவதற்காக, அங்கிருந்து 1700 கிமீ பயணித்து, பெங்களூரு வந்தடைந்தனர். அங்கே சிறுவனுக்கு டாக்டர் சுனில் பாத் தலைமையிலான மருத்துவர்கள் குழு கீமோதெரபி சிகிச்சை அளித்தனர். இதன்மூலமாக, அவனுக்கு ஏற்பட்ட லுக்கேமீயா பாதிப்பை நீக்க போராடினர்.  

ஒருவழியாக, தற்போது சிறுவனுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் சிகிச்சை பெறும் அவனுக்கு, சிகிச்சை அளிக்க நிதி கோரப்பட்டது. இதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர் நீடா ஷிவா என்பவர் 3,500 யூரோக்களை நன்கொடை வழங்கினார். இதையடுத்து, சிறுவன் டோர்ஜிக்கு, கீமோதெரபி செய்யப்பட்டு, அவனது கண்களில் இருந்த கட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒரு கண்ணில் பார்வை வந்துவிட்டதாகவும், விரைவில் மற்றொரு கண்ணிலும் ரத்தக் கட்டிகள் மறைந்து, பார்வை ஏற்படும் என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர்.