மூளையில் பாதிப்பு! தவழக்கூட முடியாத குழந்தை! ஆனால் 7 வயதில் நிகழ்ந்த அதிசயம்! நெகிழ்ந்த பெற்றோர்!

பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஏழு வயது சிறுவன் பிறந்ததில் இருந்து பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு நிற்கவோ நடக்கவோ முடியாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனியாக எழுந்து நின்று நடக்க துவங்கியுள்ளான் இதனை கண்ட அச்சிறுவனின் பெற்றோர்கள் மனம் மகிழ்ந்துள்ளார்கள்.


பிரித்தானியாவில், Milton Keynes பகுதியை சேர்ந்த தம்பதியினர் தான், ரவி - உஷா புருத்வி. இவர்களுக்கு பிரனவ் என்ற மகன் உண்டு. இவனுக்கு 12 மாத குழந்தையாக இருக்கும் போதே அவன் முட்டி போட்டு தவழ சிரமப்பட்டுள்ளான், இதை கண்ட பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, பிரனவ் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரனவ் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் காரணமாக அவனால் எழுந்து நடக்கவே தனியாக நிற்கவே கூட முடியாது. அவனுடன் யாராவது ஒருவர் எப்போதும் உடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்கள் ”National Health Service ” மூலம் பிரனவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் பிரனவ் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும் பிரயோஜனம் இருக்குமா என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

 பின்னர், பிரனவ் பெற்றோர் அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டது. £100,000 பணம் தேவைப்பட்ட நிலையில் அதற்கான நிதி தொகையும் கிடைத்தது.

இந்த நிதியுடன், அமெரிக்காவுல் பிரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவன் கால்களில் உள்ள அழுத்தம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு பிரனவ் முதல் முறையாக யார் உதவியும் இன்றி நிற்பதோடு, 30 மீட்டர் வரை நடக்கிறான். இந்த காட்சிகளை கண்ட பிரனவ் பெற்றோர் கண் கலங்கினார்கள்.

 பிரனவ் தற்போது ஊன்றுகோல் உதவியுடன் செயல்படமுடியும் என மருத்துவர்கள் தெரியவந்துள்ளது. இது குறித்து உஷா கூறுகையில், பிரனவை கவனித்து கொள்வதற்காக என்னுடைய ஐடி பணியை துறந்தேன் என்று கண் கலங்கினார். மேலும், பிரனவ் பெற்றோர் இந்த நெகிழ்ச்சி சம்பவத்திற்கு காரணமான அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து உள்ளார்கள்.