20வது மாடியில் இருந்து பெற்ற மகளை தள்ளிவிட்ட கன்னட அழகி! பிறகு அவர் எடுத்த விபரீத முடிவு!

திருமதி-கர்நாடகா பட்டம் வென்ற பெண், தன் குழந்தையை 20-வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2019-ஆம் ஆண்டில் திருமதி-கர்நாடகா பட்டம் வென்றவர் ஜோதி மலாணி. இவருடைய கணவரின் பெயர் பங்கஜ். இத்தம்பதியினருக்கு 2007-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயது மதிக்கத்தக்க மகள் உள்ளார்.  கல்யாணமான புதிதில் குவாலியரில் இருந்து இவர்கள் கர்நாடகாவிற்கு இடம்பெயர்ந்தனர்.

தற்போது இவர் புத்தம்ஹெல்லி என்னும் மாவட்டத்தில் உள்ள ஜே.பி நகரில் வசித்து வந்தார்.இந்நிலையில் இந்த ஆண்டின் திருமதி-கர்நாடகா பட்டத்தை ஜோதி வென்றார். திருமணமான சில மாதங்களிலிருந்தே இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. ஜோதியின் நடவடிக்கைகளினால் பங்கஜ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஒருமுறை ஜோதியின் தம்பி பங்கஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறையில் அடைத்தார். சில மாதங்களிலேயே பங்கஜ் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

சம்பவத்தன்று ஜோதி தன் மகளுடன் 4 வீடியோக்களை எடுத்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். அதன் பின்னர் தன் மகளை 20-வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.