உயிருக்குப் போராடிய நிலையிலும், தங்கையின் உயிரைக் காப்பாற்றிய 7 வயது சிறுமி... கண் கலங்கவைக்கும் பாசம்

உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையிலும் தன் தங்கையின் உயிரை காப்பாற்ற சிறுமி ஒருவர் போராடிக்கொண்டிருந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.


சிரியா நாட்டில் ரஷ்யாவுக்கும் சிரியாவின் இராணுவ படைக்கும் வான்வெளி சண்டைகள் நடந்தன. இந்த வான்வெளி தாக்குதலில் 5 மாடி கட்டிடமான ஒன்று இடிந்து தரைமட்டமானது.

இந்த துயர விபத்தில் அஸ்மா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவரின் பெயர் அம்ஜத் அல் அப்துல்லா. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. மூத்த மகளின் பெயர் ரிஹாம். இளைய மகள் 7 மாத குழந்தையாவார். இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ரிஹாம் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். 

ஆனாலும் தன்னுடைய மேலாடையின் மூலம் தன் ஏழு மாத தங்கையை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தார். இந்த காட்சிகளை காண இயலாமல் இவர்களுடைய தந்தை மரண வலியை அனுபவித்து கொண்டிருந்தார்.

மீட்புக் குழுவினர் சற்று நேரத்தில் வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துரதிஷ்டவசமாக தன் தங்கையின் உயிரை காப்பாற்ற நினைத்த ரிஹாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய தங்கை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. சின்னஞ்சிறு சிறுமியின் தியாக உணர்வை கண்ட நெட்டிசன்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.