சுவிட்ஜர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு ஏற்பட்ட பயங்கரம்! ஏரியில் குளிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை!

இலங்கை சிறுமி ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுவிட்சர்லாந்து நாட்டில் நிட்வால்டன் எனும் மாகாணம் அமைந்துள்ளது. தென் மாகாணத்தின் வழியே லூசர்ன் என்னும் ஏரி பாய்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிக்கு அருகே ராஜ்மதன் சோனா என்ற சிறுமி தன் உறவினர்களிடம் வசித்து வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக ஆற்றில் குளித்து விளையாட சென்றனர். 

அப்போது எதிர்பாராவிதமாக அந்த சிறுமி ஆற்றில் மூழ்கியுள்ளார். விளையாடி கொண்டிருந்த உறவினர்கள் சிறிது நேரம் கழித்தே சிறுமி தங்களுடன் இல்லாததை கண்டறிந்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். சிறுமியை கண்டறிய இயலவில்லை.

காவல்துறையினர் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆழத்தில் ஊடுருவக்கூடிய வானூர்திகளின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது ஆற்றில் 9 மீட்டர் அடியில் சிறுமி இருப்பதை கண்டறிந்தனர். மேலும், சிறுமியுடன் சேர்த்து இன்னொரு நபரும் ஆற்றில் மூழ்கி இருப்பதை கண்டறிந்தனர்.

ஒருவழியாக சிறுமியை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால் சிறுமி மூழ்கிய சில மணித்துளிகளிலேயே இறந்துவிட்டார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்றொரு நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது நேற்று மாலை முதல் நிட்வால்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.