வீட்டுக்குள் ஜன்னலில் ஊஞ்சல்! கயிறு நழுவி சிறுவன் கழுத்தை நெறித்த விபரீதம்! கதறித் துடிக்கும் தாய்!

ஊஞ்சல் கட்டி விளையாட முயன்ற சிறுவனின் கழுத்தில் கயிறு இறுகியதால் இறந்த சம்பவமானது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் அபிராமபுரம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அசதியாக இருந்ததால் நேற்று காலை வீட்டிற்கு வந்தவுடன் உறங்கிவிட்டார். 

அவருடைய மனைவி காலை நேரத்தில் வேலைக்கு சென்றுவிடுவார். வழக்கம்போல நேற்று காலை ஆறுமுகத்தின் மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். இத்தம்பதியினருக்கு 7 வயதில் கீர்த்திநாதன் என்ற குழந்தையுள்ளது.

நேற்று காலை குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லை. அப்போது கீர்த்திநாதன் ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்த கைடு மறுமுனையில் கட்டி ஊஞ்சலாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராவிதமாக கயிறு அவனுடைய கழுத்தில் இறுகியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே கீர்த்திநாதன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அவனுடைய சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சிகள் மனதை உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தன.

தகவலறிந்த அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அபிராமபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.