ஏழு ஸ்வரங்கள் உருவானது எப்படி?

சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள் எல்லா ராகங்களும் அடங்கும். அடக்கம் – ச, ரி,க, ம, ப, த, நி. இந்த ஏழு எழுத்துக்களில், ஸ்வரங்களும், ராகங்களும் அடங்கும். இந்த ஏழு ஸ்வரங்களுக்கான ஒலியை எதை வைத்துக் கொண்டு கண்டு பிடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.


வேத காலங்களில் மூன்று ஸ்வரங்களில் மட்டும்தான் இசை பாடினார்கள். அந்த மூன்று ஸ்வரங்களாவன: ’உதாப்தம்’, ’அனுதாப்தம்’, ‘சரிதம்’ ஆகிய மூன்றும்தான். உரக்கப் பாடுவது ’உதாப்தம்’ மத்திமமாய்ப் பாடுவது ’சரிதம்’, சாமவேதம் ஆகிய மூன்றும் மூன்று ஸ்வரங்களில் பாடப்பட்டு வந்தன. இது எப்படி ஏழு ஆனது? என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு விதமான ஒலியைக் கொடுக்க வேண்டும். அந்த ஏழு விதமான ஒலிகளும் எல்லா ராகங்களையும் இணைக்கும் ஒலியாக இருக்க வேண்டும். இந்த ஆராய்ச்சியின் பயனாக பிறந்ததுதான் ச, ரி, க, ம, ப, த, நி. மயிலின் அகவலிலிருந்து ச – பிறந்தது

பசுவின் அம்மா ஒலியிலிருந்து ரி - பிறந்தது

ஆட்டின் மே குரலிலிலிருந்து க - பிறந்தது

கிரௌஞ்ச பட்சியின் கீச் குரலிலிருந்து ம - பிறந்தது

குயில் ஓசையிலிருந்து ப - பி றந்தது

குதிரையின் கனைப்பிலிருந்து த - பிறந்தது

யானையின் பிளிறலிருந்து நி - பிறந்தது

இதைப் பற்றி பல இசைவாணர்கள் பல விமர்சனங்களை பல கோணங்களில் செய்கிறார்கள் என்றாலும் அடிப்படை விஷயம் இதுதான்.