திருமணமாகி ஏழே மாதத்தில் 7 மாதம் கர்ப்பம்! வளைகாப்பிற்கு முதல் நாள் கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் முடிந்த கலப்பு திருமணம்!

நாளை வளைகாப்பு நடக்கவிருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரத்தில் தேனம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பிரியா சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியான பிரியாவுக்கு இன்று வளைகாப்பு நடக்கவிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென்று பிரியா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் பிரியாவுக்கும் அவருடைய மாமியாருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் மனமுடைந்து பிரியா தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் வியூகிக்கின்றனர். 

இந்த சம்பவமானது தேனம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.