ஆடைகள் கிழிந்து வீட்டில் கிடந்த இளம் பெண் சடலம்! மணமான 7 மாதத்தில் கொடூரம்! வெளிநாட்டு கணவன் செய்த விபரீதம்!

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அந்தப் பெண்ணின் கணவனே வரதட்சிணைக்காக அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது.


விருத்தாசலத்தை  அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் சிவப்பிரியா கடந்த  மார்ச் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் வீட்டில் சிவப்பிரியா ஆடைகள் களைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையோ வேறு விதமாக இருந்தது. 

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி சிவப்பிரியா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் கணவன் வீட்டார் மீது சந்தேகம் எழுந்தது. அவர்கள் அடித்துக்கொன்று விட்டு தற்கொலை நாடகமாடியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் விசாரணையை தொடர்ந்தனர். 

இந்நிலையில் சிவப்பிரியாவின் கணவன் பார்த்திபன் அளித்த வாக்குமூலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ஒப்புக்கொண்டார். இதில் பார்த்திபனின் தாய் கவுரி, சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்,