அடப்பாவமே, இப்படியுமா ஒரு தாய்? ஏழு மாத குழந்தையை சித்ரவதை செய்து கொலை... ஆறு ஆண்டுகள் தண்டனை

7 மாத குழந்தைக்கு தலையில் பலமாக தாக்கி கொலை செய்த சம்பவத்திற்காக தாய் ஒருவரருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் எசெக்ஸ் நகர் அமைந்துள்ளது. இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்ட ஷாலினியின் பத்மநாபா என்ற பெண் தன் கணவருடன் வசித்து வந்தார். இவருக்கு வயது 33. இந்த தம்பதியினருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. 6 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர்.

செயற்கை கருத்தரிப்பின் மூலம் இவர்களுக்கு ஷாகுல் என்ற குழந்தை பிறந்தது. ஆனால் குறைப்பிரசவமாக சில மாதங்களிலேயே இந்த குழந்தை பிறந்துள்ளது. இதனால் 4 மாதங்களுக்கு குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் பரிசோதித்து வந்தனர். 

பின்னர் குழந்தைகளை சற்று தேறியுள்ளதாக கூறி மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பினர். ஆனாலும் குழந்தைக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சையும் கவனிப்பும் தேவைப்பட்டுள்ளது. இதனால் ஷாலினி மிகவும் ஆத்திரம் அடைந்தார். கிடைக்கும் நேரங்களிலெல்லாம் குழந்தையை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஷாலினி குழந்தையை கொடூரமாக தாக்கிய போது சம்பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஷாலினியின் கணவர் எசெக்ஸ் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். "என் குழந்தையை நான் பெருமளவில் நேசித்து வந்தேன். அவளை பெரிய அளவிற்கு முன்னேற்ற நினைத்தேன். ஆனால் என் மனைவி என் அனைத்து கனவுகளையும் சிதைத்துவிட்டார்" என்று சோகமாக கூறினார். 

வழக்கை விசாரித்து வந்த எசெக்ஸ் நகர நீதிமன்றம் கொலை செய்த தாய்க்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவமானது இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.