கட்டைப் பைக்குள் கதறிய பச்சிளம் ஆண் குழந்தை! கடவுள் போல் வந்த இளைஞர்கள்! பிறகு நேர்ந்த அதிசயம்!

கோவையில் தெருவோரமாக கிடந்த கட்டைப்பையில் பிறந்து 7 நாட்களே ஆன நிலையில் பச்சிளங் குழந்தையை வீசி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சந்திரசேகர் மற்றும் சத்தியதரன் ஆகிய இருவரும் நேற்று இரவு  எதர்ச்சியாக  நடந்து சென்றபோது அருகில் குழந்தை அழும் சத்தம் கேட்டடுள்ளது, அங்கு சென்று தேடிபார்த்தபோது அருகில் இருந்த அரசு மருத்துவமனையின் பின்புற வாசலின் பக்கத்தில்  உள்ள நடைபாதையில், பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை கட்டைப் பைக்குள் சுற்றி வீசபட்டிருந்தது.

கட்டைபையில் சுற்றபட்ட அழும் குழந்தையை கண்டு அதிர்ந்து போன மாணவர்கள், இது குறித்து   அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையின் தாயார் யார்? யாரேனும் குழந்தையை கடத்த முயன்று விட்டு சென்றுவிட்டனரா? என்பது  குறித்தும் அருகில் ஏதேனும் சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி பதிவாகியிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.