திடீரென கட்டுப்பாட்டை இழந்த பள்ளிக்கூடத்தின் டப்பா பேருந்து! 10 குழந்தைகள் உயிரை பறித்த கொடூரம்!

பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது உத்திராகண்ட் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தராகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வாலின் கங்சாலி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் புகழ்பெற்ற பள்ளிக்கூடம் ஒன்றுள்ளது. இன்று காலை பள்ளிக்கூடத்தின் பள்ளிப் பேருந்து 18 குழந்தைகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் மீது ஏறி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகியுள்ளது. 

சில நொடிகளிலேயே பாலத்தில் இருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பேரிடர் மேலாண்மை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை வீரர்கள் பள்ளத்தாக்கில் விழுந்த குழந்தைகளை மீட்க தொடங்கினர்.

மீட்புப்பணியின் போது 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தன. பலத்த காயம் அடைந்த பிறகு குழந்தைகளை அப்பகுதி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து பற்றிய முழு தகவல்களையும் பேரிடர் மேலாண்மை இயக்கம் வெளியிட்டது. இந்த சம்பவமானது உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.