டியூஷன் வந்த மாணவனை, டியூஷன் டீச்சர் வாளியால் தலையில் அடித்துள்ள சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு வாளியால் தலையில் ஓங்கி ஒரு அடி! துடிதுடித்த மாணவன்! ட்யூசன் டீச்சர் செயலால் மிரண்ட தாய்-தந்தை! பதற வைக்கும் சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு எனுமிடம் அமைந்துள்ளது. இதனருகேயுள்ள பள்ளிவிளை பகுதியில் மாஹின் அபூபக்கர் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மொத்தம் 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 8-ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இளைய மகனான பாரிஸ் முகமது 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இருவரும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணிடம் டியூஷன் சென்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அன்று டியூஷனுக்கு சென்ற பாரிஸ் முகமது தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு நுழைந்துள்ளார். பதறிப்போன அவருடைய பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது டியூஷனில் பயிலும் மற்றொரு பெண்ணின் நோட்டை எடுத்ததற்காக டியூஷன் டீச்சர் சரண்யா தன்னிடமிருந்த வாளியால் பாரிஸ் முகமத்தின் தலையில் பலமாக அடித்துள்ளார். உடனடியாக பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாஹின் அபூபக்கர் காவல் நிலையத்தில் ட்யூஷன் டீச்சர் சரண்யா மீது புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்து குறித்து, பாரீஸின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகனுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு உடனடியாக மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தினந்தோறும் அவனுடைய நிலையை கண்டு அவதிப்பட்டு வருகிறோம்" என்று கதறி அழுதபடி கூறினர்.
இந்த சம்பவமானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.