வளர்ந்து வரும் சமூகத்தில் பிச்சை எடுப்பதை பலர் இங்கு உழைக்காமல் சோம்பேறியாக இருந்து குடித்து வெறித்து திரிய பயன்படுத்துகின்றனர்.
இவர்தான் உண்மையான கொடை வள்ளல்..! பிச்சை எடுத்து அரசு பள்ளி மாணவர்களை படிக்க வைக்கும் பாண்டி தாத்தா

இந்த நிலையில் தூத்துக்குடி அருகில் புல் பாண்டி என்ற 66 வயதான தாத்தா தனது வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். அதில் கிடைக்கும் வருவாயை மொத்தமாக அரசு பள்ளி மாணவர்களுக்காக அர்பணித்து அவர்களது அத்தியாவசிய தேவையை போக்கி வருகிறார். சுமார் 3 லட்சம் வரை ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்காக குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார்.
கிட்டதட்ட 20 ஆண்டுகளா பாண்டி தாத்தா தான் பிச்சை எடுக்கும் பணத்தை அங்குள்ள பள்ளிகளுக்கு கொடுத்து உதவி வருகிறார். அவரது மனைவி கடந்த 1979 ல் தவறிய பின்னர் மும்பை சென்றவர், 2000 ஆம் ஆண்டு தான் தமிழகம் திரும்பினார் இருந்தாலும் அவரது பணி அனைவரது உள்ளத்தையும் நெகிழ செய்கிறது.