கோவையில் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய 65 வயது மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணின் மகளை தொடக்கூடாத இடத்தில் தொட்ட டாக்டர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

26 வயது இளம் பெண் உடல் நலக் குறைவுற்ற தனது தாயை சிறுநீரக நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு அந்த மருத்துவர் தாயை பரிசோதிப்பதற்குப் பதிலாக மகளை தவறான இடங்களில் எல்லாம் தொட்டு அங்கெல்லாம் வலிக்கிறதா? என தாயிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவரின் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட அந்தப் பெண் உடனடியாக தனது தாயையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார். மருத்துவ மனைக்குள் நடந்ததை அங்கிருந்தவர்களிடம் கூறிய அவர் மருத்துவமனைக்கு வெளியிலேயே தனக்கு நியாயம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பேரில் அத்து மீறுதல், பெண்ணின் கண்ணியத்தைக் கெடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மருத்துவரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.