55 வயது பெண் டாக்டரின் மார்பில் துப்பாக்கியால் சுட்ட 65 வயது ஆண் டாக்டர்! பிறகு காருக்குள் அரங்கேறிய பயங்கரம்! திக் திகில் காரணம்!

டெல்லி: கள்ளக்காதலியை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் பற்றிய செய்திதான் இது.


டெல்லியில் உள்ள ரோகிணி செக்டார் 13 பகுதியில் சாலையோரமாக சந்தேகப்படும் விதத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதனை போலீசார் சோதனையிட்டதில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், ஒரு ஆண், ஒரு பெண் இறந்து கிடந்ததைக் கண்டறிந்தனர். அவர்கள் இருவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் ஓம்பிரகாஷ் குக்ரஜா (65), மற்றும் சுதிப்தா முகர்ஜி (55) என தெரியவந்தது.  

இதன்படி, ஓம்பிரகாஷ்க்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தன்னுடன் பணிபுரியும் சக டாக்டரான சுதிப்தா உடன் கள்ளக்காதல் செய்து வந்திருக்கிறார். ஆனால், சுதிப்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஓம்பிரகாஷை அடிக்கடி வற்புறுத்தவே, வேறு வழியின்றி, ஓம்பிரகாஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சுதிப்தாவை முதலில் சுட்டுவிட்டு, பிறகு ஓம்பிரகாஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.