37 வயது மனைவியை அம்மாவாக்கிய 64 வயது நடிகர்! விரைவில் வீட்டில் குவா குவா சத்தம்!

லாஸ் ஏஞ்சலீஸ்: ஹாலிவுட் நடிகர் கிறிஸ் நாத் தனது 64 வயதில் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகியுள்ளார்.


செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் கிறிஸ் நாத். பல்வேறு  ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது 64 வயதாகிறது. இவர் தாரா லின் வில்சன் எனும் 37 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.  

இவர்களுக்கு 11 வயதில் ஓரியான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், தற்போது தாராவுக்கும், இவருக்கும் ஒரு புதிய குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிறிஸ் நாத் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

அவருக்கு செக்ஸ் அண்ட் தி சிட்டி படத்தில் ஹீரோயினான நடித்த சாரா ஜெஸிகா பார்க்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ் மனைவி தாராவுக்கு தற்போது 37 வயதுதான் ஆகிறது.

இருவரும் 2002ம் ஆண்டு முதல் டேட்டிங் சென்ற நிலையில், 2012ல் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.