புதுச்சேரியில் முதியவர் ஒருவர், மசாஜ் செய்ய ஆசைப்பட்டு, ரூ.5 லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
63 வயதில் ஆசை! மசாஜ் செய்துவிட இளம் அழகியை தேடிச் சென்ற தொழில் அதிபர்! பிறகு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி, திருமுடி சேதுராமன் நகரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (63 வயது). தொழிலதிபரான இவர் லாஸ்பேட்டை அருகே உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளரான ராஜேஸ் என்கிற உதயா, மஞ்சுநாத்திடம் மிக நட்பாக பழகி வந்திருக்கிறார்.
இதன்படி, கடந்த வாரம் மஞ்சுநாத்தை செல்போனில் அழைத்த உதயா, முதலியார்பேட்டை ஞானசம்பந்தர் வீதியில் புதிய கிளையை தொடங்கியுள்ளதாகவும், அங்கு இளம் அழகிகளை பணியமர்த்தி உள்ளதால், மசாஜ் செய்ய வரும்படி கோரியுள்ளார்.
இதையடுத்து, இளம் அழகிகள் மீது சபலப்பட்ட மஞ்சுநாத் உடனடியாக கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால், அங்கே யாருமே இல்லையாம். உதயா மட்டும் தனியாக இருந்திருக்கிறார். இந்த விசயம் பற்றி வெளியில் சொல்லிவிடுவேன் எனக் கூறி, அவர் மஞ்சுநாத்தை மிரட்டியுள்ளார்.
அத்துடன் மஞ்சுநாத் வைத்திருந்த ரொக்கப்பணம், விலை உயர்ந்த செல்ஃபோன், வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்துகொண்ட உதயா, அந்த போனில் இருந்து கூகுள்பே மூலமாக, தனது வங்கிக் கணக்கிற்கு ரூ.5 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பிறகு, அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். பணத்தை இழந்த முதியவர் இதுபற்றி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையேற்று வழக்குப் பதிந்த போலீசார், உதயாவை தேடி வருகின்றனர்.