மது..! மாது..! சபலம்! பேத்தியை மறந்து 35 வயது பெண்ணை படுக்கையில் வீழ்த்திய 62 வயது முதியவர்! காலையில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முதியவர் ஒருவர் முன் பின் அறிமுகம் இல்லாத இளம் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நிலையில் பேத்தியை தொலைத்து உள்ளார்.


பல்லடம் பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்க தக்க முதியவர் மாரி, அவருக்கு சுடலை ராஜா என்ற மகனும், மகாலட்சுமி என்ற பேத்தியும் உள்ளார்கள். மாரியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட, மருமகளும் சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மகன் மற்று இரண்டரை வயது பேத்தியுட வாழ்ந்து வந்த முதியவர் மாரி அங்கிருந்த வெர்க் ஷாப்பில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். நேர்த்தி கடன் செலுத்துவதற்கு முதியவர் மாரி, பேத்தி மகாலட்சுமி யை பழனி முருகன் கோயில் க்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பழனி பேருந்து நிலையம் அருகில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த முதியவருடன் அங்கிருந்த இளம் பெண் லேசாக பேச்சு கொடுத்து தனக்கு ஆதரவு ஏதும் இல்லை. அனாதை யாக இருக்கே, என்னை உங்க கூட அழைத்து போனால் உங்களுக்கு உதவியாக வீட்டு வேலைகளை கவனித்து கொள்வதாக நாடகமாடியுள்ளார்.

இதனை அறியாமல் இளம்பெண் மீது சபலம் கொண்ட முதியவர் மகன் வேலை விஷயமாக வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து சென்றுள்ளார். மேலும், தனியாக இருந்த பெண்ணிடம் மது போதையில் உல்லாசமாக இருந்துள்ளார். அசதியில் தூங்கிய முதியவருக்கு கண் விழித்த போது அதிர்ச்சி காத்து இருந்தது.

இரண்டரை வயது பேத்தியையும் இளம் பெண்ணையும் காணவில்லை இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்த முதியவர், காவல் துறைக்கும் புகார் அளித்துள்ளார். அங்கிருந்த சி சி டி வி காட்சிகள் மூலமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது .