7 பிள்ளைகள்! 7 பேரன் பேத்திகள் எடுத்த பிறகு 22 வயது இளைஞருடன் தகாத உறவு! அதிர வைத்த 62 வயது பாட்டி!

டெல்லியிலுள்ள ஆக்ராவில் 62 வயதாகும் பெண்ணொருவர் 22 வயது இளைஞருடன் தகாத உறவில் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை அடுத்து அந்த இளைஞரின் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


62 வயதாகும் பெண்ணுடன் 22 வயதாகும் இளைஞர் ஒருவர் தன் காதலை முறித்துக் கொள்ள முன்வராததால் அவர் மீது அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மகன்கள் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த பெண்ணின் கணவரும் மகனும் இணைந்து கடந்த வியாழக்கிழமை அன்று காவல் நிலையத்தை அடைந்து அந்த இளைஞனுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அந்த 62 வயது பெண் 7 பிள்ளைகளுக்கு தாயும் 7 பேரப்பிள்ளைகளுக்கு பாட்டியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பெண் டெல்லியில் பிரகாஷ் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியில் இருக்கும் 22 வயது இளைஞருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது . இவர்களது காதலை அடுத்து இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மகன்கள் இணைந்து  எட்மதுடவுலா காவல் நிலையத்தில் அந்த இளைஞரின் மேல் புகார் அளித்துள்ளனர்.

அப்போது அந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இடையே மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து போலீசார் இருவருக்கும் இடையில் சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரையும் விசாரித்த போலீஸாரிடம் அந்தப் பெண்ணும் அந்த இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.