நியூயார்க்: 61 வயது முதியவர் ஒருவரின் விநோத ஆசை, சாகும் தருவாயில் நிறைவேறியுள்ளது.
61 வயது! வாட்டி வதைத்த புற்று நாய்! சுவாசக் கருவி! ஒரே ஒரு கடைசி ஆசை! நிறைவேறிய அடுத்த நிமிடம்..! நெகிழ்ச்சி சம்பவம்!

ஆம். அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள சவுத் பெண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டேன்லி. 61 வயதான இவர், புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த ஜான் ஸ்டேன்லி தனது கடைசி ஆசையாக, ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்டார்ட் செய்து உறுமும் சத்தத்தை கேட்க வேண்டும் என, குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதன்பேரில், ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசை பற்றி ஃபேஸ்புக் வழியாக, அவரது உறவினர்கள், நண்பர்கள் பலரும் தகவல் பகிர இதையேற்று, ஹார்லி டேவிட்சன் பைக் வைத்திருக்கும் ஏராளமானோர் ஜான் வீட்டு முன்பாக திரண்டனர். 200க்கும் மேற்பட்ட பைக்குகள் வந்த நிலையில், ஜான் ஸ்டேன்லியை அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
உடனே, அனைவரும் மிகஉணர்ச்சிவசப்பட்ட நிலையில், பைக்கை ஒன்றாக ஸ்டார்ட் செய்து ரேஸிங் செய்தார்கள். இந்த சத்தம் கேட்டு ஜான் ஸ்டேன்லி மிகவும் மகிழ்ந்தார். இதுபற்றி கை, கால்களை அசைத்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதற்கடுத்த 2 மணிநேரத்தில் அவரது உயிர் பிரிந்ததுதான் இதைவிட பெரிய சோகம்.
சமீபத்தில்தான், ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை ஸ்டேன்லி ஆசை ஆசையாக வாங்கியிருந்தார். ஆனால், அதனை ஓரிரு முறை ஓட்டிய நிலையில், புற்றுநோய் அவரை கொன்றுவிட்டதாக, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.