அழகான தமிழச்சிக்கு 60ம் கல்யாணம்! சகோதரர் உதயநிதிக்கு பத்திரிகை வைக்கலையா?

அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஓட்டுப் போடுங்க என்று உதயநிதி ஜொள்ளுவிட்டு தேர்தல் பிரசாரம் செய்ததையடுத்து, அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்போல் தோன்றுகிறது.


 உடன்பிறவா சகோதரி சசிகலா போன்று, உதயநிதியை உடன்பிறவா சகோதரன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்..

எழுத்தாளர், நல்ல பேச்சாளர், பேராசிரியை என்பதால் தமிழச்சி வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் போனால் நாட்டு மக்களுக்கு நிறையவே நல்லது நடக்கும் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். 

தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒரு பக்காவான ஆத்திக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டதை, மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் அவரது கணவரான சந்திரசேகருடன் சுமதி என்ற தமிழச்சிக்கு 60ம் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றதாம். அந்தக் கல்யாணம் வைதீக முறைப்படி நடைபெற்றது என்று வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்கள் எதிர்க் கட்சியினர்.

அட, இந்த வயசுலேயும் இத்தனை அழகா இருக்காங்களேன்னு சந்தோஷப்படுறதை விட்டுட்டு இதெல்லாம் ஒரு விஷயமா... அழகா இருக்கிறதால மத்திய அரசு போடுற அத்தனை திட்டமும் இனிமே தமிழ் நாட்டுக்குத்தான் வரும் புரோ.. 

முதல்ல தமிழச்சியை ஜெயிக்க வைங்க.