ஒரே நாளில் தப்லீக் ஜமாத்காரர்கள் 50 பேருக்கு கொரோனா.! 608 பேர் தலைமறைவு! தமிழகத்தில் வைரஸ் பரவும் அபாயம்?

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய 1131 பேரில் இதுவரை சுமார் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்று திரும்பிய 608 பேர் தலைமறைவாகியுள்ளதால் கோவிட் 19 நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய ஈரோட்டைச் சேர்ந்த 24 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதியாகியுள்ளது. இதே போல் சேலம், மதுரையிலும் அந்த மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் இன்று தப்லீக் ஜமாத்தை சேர்ந்த மேலும் 45 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய சுமார் 1131 பேரில் 523 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவர்களை தனிமைப்படுத்தி கொரோனா சோதனைக்கு உட்படுத்தியதில் சுமார் 50 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் 608 பேர் தங்களை தாங்களே வந்து கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்று உங்கள் மூலமாக உங்கள் குடும்பத்தார் உள்ளிட்டோருக்கும் பரவும் என்று பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை அந்த 608 பேர் என்ன ஆனார்கள் என்கிற தகவல் வெளியாகவில்லை.

இதனால் அவர்களுக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் அவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவுக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே அவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.