6000 கிறிஸ்தவர்கள் கொடூர கொலை! உயிர்பிழைக்க தப்பி ஓட வேண்டிய நிலை..! அதிர வைக்கும் காரணம்! எங்கு தெரியுமா?

கடந்த 4 வருடங்களாக நைஜீரியா நாட்டில் கிட்டத்தட்ட 6000 கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


நைஜீரியா நாட்டில் ஃபுலாணி என்ற நாடோடி அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நாடோடி அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்துவ மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களை பிடுங்கி கொண்டு அவர்களை விரட்டி அடிக்கின்றனர். இளங்கலை தர மறுத்தால் அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளனர்.

இவர்களுடன் அந்நாட்டில் "போக்கோ ஹராம்" என்ற தீவிரவாத அமைப்பும் இயங்கி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த ஓர் இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மனித உரிமை ஆணையத்தின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பர் என்றும், கடந்த 4 ஆண்டுகளில் 6,000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பினர் தண்ணீர் முதலிய பொருட்களுக்காக இது போன்ற பயங்கர செயல்களில் ஈடுபடுவர். அவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாடோடிகள் என்று அனைவரையும் தாக்கி தங்களுக்கு வேண்டிய பொருட்களை அபகரித்து செல்வர். இந்தத் தீவிரவாத குழுவில் இருந்து பிரிந்த சிலர் "ஐ.எஸ்.டபிள்யூ.பி" என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

தற்போது இந்த 4 இயக்கங்களும் நைஜர், சேட், கேமரூன் ஆகிய நகரங்களில் அதிபயங்கர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடகிழக்கு நைஜீரியா எப்பவுமே ஆபத்தான பகுதியாக கருதப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.