மாதம் ரூ.1 லட்சத்தில் வேலை! ஆசையை தூண்டிய இளைஞன்! ஆடைகளை களைந்த 600 பெண்கள்! 2000 வீடியோ!

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களின் ஆபாச புகைப்படங்களை பெற்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிளமென்ட் ராஜ் செழியன் என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்று பல பெண்களை நம்ப வைத்துள்ளார். மேலும் ஆபாச புகைப்படங்களை அனுப்பினால் தான் உங்களுக்கு வேலை நிச்சயிக்கப்படும் என்று பெண்களை மிரட்டி அவர்களது அந்தரங்க புகைப்படங்களை வாங்கியுள்ளார்.

செழியனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இவரும் இவருடைய மனைவியும் வெவ்வேறு நேரங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால் மனைவி இல்லாத நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக இந்த ஆபத்தான வழியை கையில் எடுத்தார்.

தன்னுடைய பெயரை பிரதீப் என்று கூறி 5 ஸ்டார் ஹோட்டலின் மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு மாதம் ஒரு லட்சத்தில் வேலை தருவதாக பேசியுள்ளார். முதலில் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். முகப்பில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய உடல் கட்டமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் காரணத்தை கூறியுள்ளார்.

அதில் தேர்வானவர்களிடம் வீடியோ கால் மூலமாக அவர்களுடைய நிர்வாண உடலை கண்டு ரசித்துள்ளார். மீண்டும் அழைப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விடுவார்.

இதேபோன்று இதுவரை 600 பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார். சென்னையில் குறிப்பிட்ட சின்ன வட்டத்திற்கு உள்ள பெண்களை மட்டுமே குறி வைத்துள்ளார். ஆனால் ஹைதராபாத் பெங்களூரு ஆகிய இடங்களில் நிறைய பெண்களை ஏமாற்றி உள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத் நகரில் உள்ள மியாபூர் காவல்நிலையத்தில் பெண்ணொருவர் புகார் அளித்திருந்தார். மியாபூர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது செழியன் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

காவல்துறையினர் செழியனின் இடத்திற்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.