இரவில் திருமண வீட்டில் மாயம்! பகலில் ரத்த காயங்களுடன் சடலம்! 6 வயது சிறுமியை சிதைத்த கொடூரன்! பதற வைக்கும் சம்பவம்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் பகுதியில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியில் 6 வயது சிறுமி வர்ஷினி என்பவர் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


6 வயது சிறுமி வர்ஷினி யின் பெற்றோர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் பகுதியில் உள்ள சித்தா ரெட்டி என்னும் தங்களுடைய உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றிருக்கிறது.

இரவு 9:45 மணி அளவில் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து சிறுமி வர்ஷினி அங்கிருந்து தன்னுடைய உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் அதனை அடுத்து சுமார் 10 மணி அளவில் இருந்து வர்ஷினி மாயமாகியுள்ளார். பெற்றோரும் உறவினர்களும் சுற்றியிருந்த எல்லா இடங்களிலும் சிறுமியை தேடி அலைந்து உள்ளனர். எங்கு தேடியும் வர்ஷினி கிடைக்காததால் அருகிலிருந்த காவல்நிலையத்தில் வர்ஷினி காணாமல் போனதை பற்றி புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை விசாரணை செய்தனர் . தொடர்ந்து சுற்றியிருந்த எல்லாப் பகுதிகளிலும் சிறுமியை தீவிரமாக தேடி உள்ளனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை சுமார் 6: 45 மணி அளவில், அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சிறுமி வர்ஷினி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சிறுமியின் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனைக் குறித்து போலீசார் பேசுகையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப் படும்போது ஆடைகள் அனைத்தும் கலைந்த நிலையிலும் உடலில் அங்கங்கு காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் இருந்ததாக கூறினர்.

இதனையடுத்து சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி வர்ஷினியை மர்மநபர் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இருப்பினும் அந்த மர்ம நபரின் முகம் சரியாக தெரியாததால் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்