6ம் வகுப்பு மாணவி கொடூரமாக பலாத்காரம்! பிறகு நேர்ந்த விபரீதம்! குற்றவாளியை தூக்கில் ஏற்றிய நீதிமன்றம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6-ஆம் வகுப்புச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


ஷாதால் மாவட்டம் புர்ஹத் நகரை அடுத்த ஜக்ரஹா கிராமத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்புச் சிறுமியை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி காணாமல் போன நிலையில் அன்று மாலை கிராமத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் கொட்டப்பட்டிருந்த வைக்கோலுக்கு அடியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

அந்த கட்டிடத்துக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்நாத் கேவத் என்ற நபர் வந்து சென்றதை நேரில் பார்த்த சிலர் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அதனை தாங்க இயலாமல் சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த வழக்கை புர்ஹத் நகர கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இது மனித நேயமற்ற கொடூரத் தாக்குதல் என நீதிபதிகள கருத்து தெரிவித்தனர். கேவத் மீது பாலியல் பலாத்காரம் செய்ததன் மூலம் கொலை, தடயங்களை மறைத்தல் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் நீதிபதிகள் மரண தண்டனை , அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை விதித்துள்ளனர்.