பல நாட்கள் பல பேர் பாலியல் வல்லுறவு! கோவை சிறுமி வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்!

கோவையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடுத்தடுத்து திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை துடியலூர் ஐச் சேர்ந்த இந்த ஆறு வயது சிறுமி நேற்று முன்தினம் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உடல் முழுவதும் உள்காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிறுமியின் கழுத்தில் கயிறை வைத்து நெரித்து அந்த கொடூரர்கள் கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. துணியை வாயில் வைத்து அடைத்து ஒரு கயிறு போன்ற பொருளை வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்து அதில் அவருக்கு கழுத்து நரம்பு அறுந்து உயிரை விட்டுள்ளார் துர்பாக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாமல் சிறுமியின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் எனினும் கடுமையான காயங்கள் உள்ளன. இதனால் கும்பலாக சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிறுமியின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயிலில் நடைபெற்ற ஆய்வில் அச்சிறுமி பல நாட்களாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  6 வயது சிறுமியை இந்த அளவிற்கு கொடூரமாக கொலை செய்த நபர்கள் யார் என்று போலீசார் தற்போது வரை அறிந்து கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.