6 வயது சிறுமி கொடூர கொலை! சடலத்துடன் உல்லாசம்! 20 வயது இளைஞன் வெறிச் செயல்!

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.


இந்த கொடூரத்தைச் செய்த நபர், பீகாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன். அவனை உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். குறிப்பிட்ட 6 வயது சிறுமி, ஹோலி பண்டிகையின்போது, திடீரென காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். 

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் சடலம் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கிடப்பதாகக் கண்டறிந்தனர். சிறுமியின் சடலம் அருகேயே, வேலி போட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி கிடந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் அண்டை வீட்டாரிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தினார்.

இதில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் தர்மேந்திர சிங், ஹோலி பண்டிகை கொண்டாடியதாகவும், அதற்காக தனது நண்பர்களை வரவழைத்ததாகவும் கூறியுள்ளார். அவர்களில் ஒருவரான  ராஜேஷ் குமார் என்ற இளைஞன் மீது தர்மேந்திர சிங் புகார் தெரிவித்துள்ளார். 

உடனடியாக, ராஜேஷ் குமாரை சுற்றி வளைத்த போலீசார், அவனை கடுமையாக விசாரித்தனர். இதில், அவன், ஹோலி கொண்டாடிய சிறுமியை, அருகில் உள்ள ரயில் தண்டவாளம் கூட்டிச் சென்று, பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளான். மேலும், பலாத்காரம் செய்யும்போது, அந்த சிறுமி  கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி, ஆத்திரத்தில், அவளது கழுத்தை, இரும்புக் கம்பி சுற்றி நெரித்துக் கொன்றதாவும், அதன்பிறகும் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து, அவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெண் குழந்தைகளை பெற்றவர்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.