குமட்டல்..! வாந்தி..! பிறகு மயக்கம்...! திடீரென பறிபோன 6 வயது ரேவதியின் உயிர்! வாழப்பாடியை மிரட்டும் மர்ம காய்ச்சல்!

சேலம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்மக் காய்ச்சலாம் இன்னொரு உயிர் போகாமல் இருக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி-ரேவதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 6 வயது மகள் வர்ஷாஸ்ரீக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. பிறகு வாந்தி எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் மயங்கியுள்ளார்.

இப்படி உடல்நிலைக் குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் வர்ஷாஸ்ரீயை அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் வர்ஷாஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில் மர்மக் காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதை அடுத்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் முயற்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மர்மக் காய்ச்சல் பரவமால் தடுக்க அவர்கள் கூறிய அறிவுரைகள் தண்ணீர் தேக்கி வைக்கும் குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் குப்பிகள், தேங்காய் மட்டைகளையும், குட்டையாக தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க தண்ணீர் தொட்டிகளில் ‘குளோரின்’ மருந்துகளை தெளிக்க வேண்டும் என பல அறிவுரைகள் கூறினர். மழைக்காலங்களில் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்குகிறது. நன்னீரில் வளரும், பகல் நேரத்தில் கடிக்கும் ‘ஏடிஸ்’என்ற பெண் கொசுக்களால் டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது.

எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.