கர்நாடக மாநிலம் கோப்பல் அருகே 6 வயது சிறுமி பிச்சை எடுத்து உடல் நலிவுற்ற தன் தாயை காப்பாற்ற போராடிய சம்பவம் பார்பவர்களை ஆழமாக பாதித்தது.
தாயை காப்பாற்ற வீதி வீதியாக பிச்சை எடுக்கும் சிறுமி! அதிர வைக்கும் காரணம்!

கர்நாடக, கோப்பல் பகுதியை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ ( 6 வயது) ஏற்கனவே தந்தை கை விட்ட நிலையில், உடல் நலமற்ற தாயுடன் தெருக்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
பொதுவாக இந்த சிறு வயதில் மற்ற பிள்ளைகளுக்காக அவர்களது தாய் அரவனைத்து பாதுக்காக்கும் சூழலில் , பாக்கிய ஸ்ரீ தனது தாயின் பசிக்காக தெருக்களில் பிச்சை எடுத்த காட்சிகள் பார்ப்பவர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியது .
இந்த நிலையை பார்த்த அப்பகுதி மக்கள் நல்லெண்ண அடிப்படையில் பாக்ய ஸ்ரீ யின் அம்மாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் சிறுமியின் நிலையை குறித்து அறிந்த அம்மாநில அரசு தாய் மற்றும் சேய் நலவாரியம் இருவருக்கான வாழ்வாதாரம் குறித்த பொறுப்பை தானாக முன் வந்து ஏற்றுள்ளது, பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.