கடத்தில் சென்று பாலியல் வல்லுறவு! வலி தாங்காமல் அலறிய சிறுமி! பிறகு காமக் கொடூரன் செய்த பயங்கரம்!

ஒடிசா மாநிலத்தில், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரனை போலீசார் கைது செய்தனர்.


ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வருக்கு அருகில் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட சிறுமியை, அண்டை வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன், ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கே, சிறுமியை பலாத்காரம் செய்த அவன், சிறுமி கூச்சல் போட்டதால், கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டான். 

இந்த சம்பவம் வியாழனன்று இரவு நிகழ்ந்துள்ளது. இது தெரியவந்ததும், அக்கம் பக்கத்தினர், அந்த கொடூரனின் வீட்டினுள் சென்று, சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால், சுயநினைவின்றி கிடந்த சிறுமி, மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட பின், உயிரிழந்தார்.

இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த நபரை, உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்து, அடித்து உதைத்தனர். பின்னர், அவனை போலீசில் ஒப்படைத்தனர். மக்கள் அடித்ததில் பலத்த காயம் அடைந்த அந்த நபரை போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர்.