பிறக்கும் போதே பார்வை பறிபோனது..! 6 வயதான பிறகு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி..! கதறி அழும் பெற்றோர்..!

லண்டன்: பிறக்கும்போதே கண் தெரியாமல் இருந்த சிறுவன், தற்போது கேட்கும் திறனையும் இழக்க தொடங்கியுள்ளான்.


பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆடம் ஆல்டர்மேன் (32 வயது), இவரது மனைவி கர்லா கோலெட்ஜ். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்  உள்ளனர். இதில், மகனுக்கு கேமரூன் ஆல்டர்மேன் எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகின்றனர். தற்போது 6 வயதாகும் அச்சிறுவன் பிறக்கும்போதே கண் தெரியாமல் பிறந்தார். ஆனாலும், கேட்கும் திறன் இருந்ததால், குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வந்த சிறுவனுக்கு, தற்போது கேட்கும் திறனும் பாதிக்க தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டில், சிறுவனின் இடது காது முற்றிலுமாக கேட்கும் திறனை இழந்துவிட்டது. தற்போது வலது காது மட்டுமே கேட்கும் திறனை கொண்டுள்ளது. எனினும், அதுவும் படிப்படியாகக் குறைந்து வருவதால், சிறுவன் கேமரூன் மற்றும் அவனது பெற்றோர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.  

இதுதொடர்பாக மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, சிறுவனுக்கு, Norrie எனும் நோய் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு கருவிலேயே குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியதாகும். இது பாதித்த குழந்தைகளுக்கு பிறவியிலேயே கண் பார்வை இருக்காது, நாளுக்கு நாள் காது கேட்கும் திறனையும் இழக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, மகனின் கேட்கும் திறனை மீட்டெடுப்பதற்காக, 60 ஆயிரம் யூரோ மதிப்பீட்டிற்கு நிதி திரட்டும் பணிகளை கேமரூன் தம்பதியினர் மேற்கொண்டுள்ளனர்.  

கண் தெரியாவிட்டாலும், கேட்கும் திறன் இருந்தால் தங்களது மகன் இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழ்வான் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.