சிறுவனை அப்படியே போட்டு அமுக்கிய சிமெண்ட் பெஞ்ச்! விளையாட்டு மைதானத்தில் அரங்கேறிய கொடூரம்!

ஹைதராபாத்தில் சிமெண்ட் பெஞ்ச் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அந்த பெஞ்ச் நிலை தடுமாறி தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.


ஹைதரபாத்தின் ஜனப்ரியா உட்டோப்பியா என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் பிஷன் சர்மா. இந்தச் சிறுவன் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஆதாரமன்றி ஆடிக் கொண்டிருந்த ஒரு சிமிண்ட் பெஞ்ச் மீது ஊஞ்சல் போல மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நிலை தடுமாறிய பெஞ்ச் தலைகுப்புறக கவிழ்ந்து விழுந்ததில்  அந்த பெஞ்ச்சுக்கு கீழே சிறுவன் விழுந்தான்

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விரைந்து வந்து பெஞ்ச்சை அகற்ற அதற்கு கீழ் தலையில் இருந்து கொட்டும் ரத்தத்துடன் அந்தச் சிறுவன் கிடந்தான். சற்று நேரத்தில் அங்கு கூட்டம் கூடிவிட சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தலையில் இருந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியதால் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்ஹ்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.