அடுத்த 3 நாட்கள்..! ஒன்று சேரும் 6 கிரகங்கள்..! பீதி கிளப்பும் ஜோதிட கணிப்பு! திக்திக் நிமிடங்கள்!

இன்று முதல் 3 நாட்களில் 6 கிரகங்கள் ஒன்று சேர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை ஜோதிட நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.


ஜோதிடத்தின்படி இன்று முதல் 27-ஆம் தேதி வரை தனுசு ராசியில் சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுகிறது என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்து கூறியுள்ளனர். இந்த சம்பவத்தினால் நிச்சயமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால் இதற்கு அறிவியல் வல்லுனர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது கோள்கள் சூரியன் மற்றும் சந்திரன் சுற்றும் தன்மை படைத்தன. கிரகங்கள் ஒன்றன் பாதையில் ஒன்று வருவது வழக்கமாகும்.

இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று எல்லா கோளரங்க இயக்குநர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதேபோன்ற 1962-ஆம் ஆண்டில் ராகு கோளை தவிர மற்ற 8 கோள்களும் மகரராசியில் இணைந்தன. அப்போது உலகம் அழிந்துவிடும் என்று பல்வேறு ஜோதிட வல்லுநர்கள் கூறினார். சில ஜோதிடர்கள் நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினர். 

தோஷங்கள் நெருங்கக்கூடாது என்பதற்காக நடிகை பானுமதி வீட்டில் யாகம் வளர்த்தார். நடிகை அஞ்சலிதேவி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போதைய அமைச்சர் பக்தவத்சலம் நவகிரகங்களை சுற்றி வந்து தோஷ நிவர்த்தி பூஜைகளை மேற்கொண்டார். குன்றக்குடி  மடாதிபதி " 8 கோள்களின் இணைப்பால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை" என்று பரபரப்பாக பேட்டி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்முறை 6 கோள்கள் இணைவதால் ஏற்பட போகின்ற விபரீதத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.