ஒரே சலூன் கடையில் ஒரே நாளில் முடிவெட்டிச் சென்ற 6 பேருக்கு கொரோனா..! எப்படி தெரியுமா? அதிர்ச்சி காரணம்!

முடி திருத்தம் செய்ய சலூனுக்கு சென்ற 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கையாள வேண்டும் என்று தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு சலூன் கடையில் முடி திருத்தம் செய்ய வந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தனது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் மாநிலத்தில் உள்ள பார்கோன் என்ற பகுதிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். ஊருக்கு சென்றவுடன் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் அந்தக் கடைக்குச் சென்ற அதே நாளில் அந்த சலூனுக்கு வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கார்கோன் மாவட்டத்திலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில் சலூனுக்கு சென்றதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவிய அந்த 6 நபர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் பார்கோன் கிராமமே தற்போது மூடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். அந்த சலூன் கடையில் முடித்திருத்தம் செய்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இந்தூரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு வந்த அந்த நபரின் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த சலூன் கடையில் முடி திருத்தம் செய்ய வந்த அனைவருக்கும் ஒரே துண்டையும் , ஒரே முடி திருத்தம் செய்யும் கருவிகளையும் பயன்படுத்தியதே வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.