கிருஷ்ண பகவானின் வணக்கத்திற்குரிய மனிதர்கள் யார் என்று அறியுங்கள்! நாமும் அவர்களில் ஒருவராக மாறலாமே!

ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார்கள்.


அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக ஸ்ரீருக்மிணி கூறினார்கள். சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார். அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை பூஜிக்கிறாய் தியானிக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது.

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே.:

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள் தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர், மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.ஆகியோர்.