கரை புரண்டு ஓடிய ஆறு! உள்ளே பாய்ந்த பயணிகள் பேருந்து! 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 6 பயணிகள் உயிருடன் இறந்த சம்பவமானது மத்தியபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் இந்தூர். 2 நாட்களுக்கு முன்னர் இந்தூரிலிருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சாகத்தபூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது நள்ளிரவில் ரன் செய் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது.

ரிச்ஹன் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகி சென்றது. துரதிஷ்டவசமாக பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் விரைந்து வந்தனர். மீட்புப்படையினர் அயராது உழைத்ததில் படுகாயமடைந்த 18 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த சம்பவமானது மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.