ரயிலிலிருந்து கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளி விட்டவர் தலைமறைவானதால், போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
திருமணமாகி 27 நாள்..! 6 மாதம் கர்ப்பமாக இருந்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்! பதைபதைப்பு சம்பவம்!

மும்பை மாநிலத்தைச் சேர்ந்த சாகர் என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். இந்நிலையில் ராணி என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் ராணி கர்ப்பம் ஆனார். வேறுவழியின்றி 6 மாத கர்ப்பினியான ராணியை சாகர் திருமணம் செய்துகொண்டார்.
இந்த விஷயம் அறிந்த முதல் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த சாகர் ராணியிடம் தமக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்றும் அதைக் கலைத்து விடுமாறும் கூறியிருக்கிறார்.
இதனை மறுத்த ராணிக்கும் சாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது இருவருக்கும் திருமணமாகி 27 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. மேலும் அவர்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சாகர் ராணியை ஓங்கி அடித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த ராணி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் ராணி உயிரை இழக்காமல் காயங்களுடன் தப்பித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சாகர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.