புதுப் பொண்டாட்டியை கொடூரமாக தீர்த்து கட்டிய கணவன்! பதற வைக்கும் காரணம்!

சென்னை தாம்பரம் அருகே திருமணமான மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்துவிட்டு. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தென்காசி சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும், விக்னேஷ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணமான கையோடு  மாரியப்பனுக்கு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் குடி பெயர்ந்தனர்.

இதற்கிடையேமனைவியிடம் மாரியப்பன் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும். விக்னேஷ்வரியிடம் அவளது உறவினர்களிடம் பேச கூடாது என  கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்னேஷ்வரி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மாரியப்பனிடம் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த  மாரியப்பன் விக்னேஷ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு  இரவு பணிக்குச் சென்றுவிட்டார் மாரியப்பன். இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை மாரியப்பன் வீட்டுக்கு வந்த பிறகு விக்னேஷ்வரி இறந்த அதிர்ச்சியில் தான் என்ன செய்வது என்று திகைத்து போய் இருந்தார். பின்னர் மாரியப்பன் நேற்றிரவு விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரை அழைத்து தானும் கதறி அழுவது போல் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியப்பனை விசாரணைக்கு எடுத்து விசாரித்தபோது செவ்வாய் இரவு அன்று நடந்த வாக்குவாதத்தில்  ஆத்திரம் அடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் விக்னேஷ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்ந்தது மாரியப்பனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கணவனே மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.