திருமணமாகி 6 மாதத்தில் 4 மாத கர்ப்பம்! கணவன் செய்த விபரீத செயல்! மனைவி எடுத்த பகீர் முடிவு!

6 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்டலை என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்கு சடையன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகளின் பெயர் ஐஸ்வர்யா. இதே பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இதனிடையே ஐஸ்வர்யா 4 மாதங்கள் கர்ப்பமானார். பரிசோதனைக்காக பாரதி ஐஸ்வர்யாவை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். பரிசோதனை முடிந்த பின்னர் ஐஸ்வர்யாவை அவருடைய தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு பாரதி சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பாரதிக்கு செல்போன் அழைப்பு விடுத்து கூறியுள்ளார். ஆனால் அதை பாரதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீண்ட நேரம் கழித்து பாரதி தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மனைவி தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்,ஐஸ்வர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவிற்கு தங்களுடைய புகுந்த வீட்டில் நிம்மதியில்லை என்று புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.