வயிற்றில் 6 மாத சிசு..! மூச்சை இழுத்துவிடுவதே பெரும் போராட்டம்! கொரோனாவால் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் பாதித்த கர்ப்பிணி பெண் கண்ணீர் மல்க பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் பேசுபவர் பிரிட்டனைச் சேர்ந்த கரேன் மேன்னரிங் ஆவார். அதில், அவர் ''நான் எனக்காகவும், என் வயிற்றில் உள்ள  குழந்தைக்காகவும் போராடிக் கொண்டுள்ளேன். தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து என்னைப் போல முட்டாள்தனம் செய்துவிடாதீர்கள்.

அற்பத்தனமான காரணங்களுக்காக வெளியே வந்து கொரோனா நோயை வாங்கிக் கொள்ளாதீர்கள். இதனால், நீங்கள் மட்டுமின்றி, உங்களின் அன்புக்குரியவர்களும் பாதிக்கப்படுவார்கள்,'' என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. எனினும், இது கடந்த வாரம் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.

தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நீங்கி, குணமடைந்துள்ளார். 39 வயதான கேன் மேனரிங் உடல்நலம் தேறியதும் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அவரது வயிற்றில் உள்ள 6 மாத குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது. இருந்தபோதிலும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தியபடி வசித்து வருகிறார்.