விமானத்தில் பறந்தபோது நடுவானில் உயிர் இழந்த 6 மாதக் குழந்தை - அதிர்ச்சியில் பயணிகள்

டெல்லி செல்லும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது 6 மாத குழந்தை இறந்துள்ள சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தனது 6 மாத குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே இருதய கோளாறு இருந்து வந்துள்ள நிலையில் அதை சரி செய்வதற்காக பாட்னாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.

அவர்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் டெல்லி சென்று கொண்டிருக்கும்போது நடுவானில் திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிது நேரம் குழந்தை மூச்சுவிட முடியாமல் தவித்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதை அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழத் தொடங்கினார்.விமானத்தில் உள்ள மருத்துவர் மூலம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பலனும் இல்லை.

இந்நிலையில் குழந்தையின் இறப்பு குறித்து சக பயணிகளும் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.